×

பாலகிருஷ்ணன் பேச்சு கோயிலில் பாலாலய விழா

லால்குடி, நவ.2:  லால்குடி மேலரசூர் கிராமத்தில் அரசப்பன், கைலாசநாதர், பாப்பாத்தியம்மன்,  கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோயில் கடந்த 1978ம் ஆண்டு கட்டி  40 ஆண்டுகளாக கோயில் குடிமக்கள் பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.
கோயில் சிதிலமடைந் ததால்  பொதுமக்கள் மற்றும் கோயில்குடிமக்கள் ஒன்றுகூடி கோயிலை இடித்து புதிதாக  கட்ட முடிவு செய்து நேற்று பாலாலயவிழா நடைபெற்றது. விழாவில்  சிவாச்சாரியார்கள் சண்முகம், விக்னேஷ்  தலைமையில் காலை 7 மணிக்கு  கணபதிஹோமம் 96 வகையிலான  திரவிய ஹோமம் தொடங்கி புன்யவாசனம் முதல்காலயாகபூஜை  தொடர்ந்து 10 மணிக்குமேல் சிறப்பு அபிஷேகம் தீபாராதனைக்கு பின் பாலாலயவிழா நடைபெற்றது.விழாவில் கிராம முக்கியஸ்தர்கள், அர்ச்சகர்கள்  கோயில்குடிமக்கள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : festival ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...